தேசிய மற்றும் மாநிலத்தின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் வருமாறு: தேர்தல் நடைபெறாத காலங்களில் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளையும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளையும் பாதுகாப்பாக வைத்தல். பொதுவாக, மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் மாவட்டத் தலைமையிடத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரின் (DEO) பாதுகாப்பில் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள், இரண்டு பூட்டுகளால் பூட்டப்பட்டு மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் (DEO) பூட்டு-1-இன் அனைத்து திறவுகோல்களும் மாவட்டத் துணை தேர்தல் அலுவலரிடம் (DEO) அல்லது அதற்கு சமமான பதவித்தரம்கொண்ட அலுவலரிடம் பூட்டு -2-இன் அனைத்து திறவுகோல்களும் பாதுகாக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் பாதுகாத்து வைக்கப்படும் கிடங்கு/ காப்பு அறையில் குறைந்தது பாதியளவு ஆயுதக் காவல் பாதுகாப்பு, CCTV கண்காணிப்பு, குறிப்பு புத்தகம் போன்றவை இருக்கும். தேர்தல் நடைபெறாத காலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்யும் வரை, தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் பாதுகாகப்பட்டுள்ள காப்பு அறைகள் (இயக்கம், ஆய்வுசெய்தல் போன்ற யாதொரு நோக்கத்திற்காக) திறக்கப்படும்/ மூடப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் பாதுகாகப்பட்டுள்ள காப்பு அறைகளை திறக்கும்போதும் மூடும் போதும், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் உடனிருப்பர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாத்து வைக்கப்படும் கிடங்கினை/ காப்பு அறையை திறக்கும்போதும் மூடும்போதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் முதல் நிலை சரிபார்ப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் முதல் நிலை சரிபார்ப்பு ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் மாவட்ட தேர்தல் அலுவலர் (DEO) நிலையில், பாரத மின்னணு நிறுவனம் (BEL) மற்றும் இந்திய மின்னணுக் கழகத்தின் (ECIL) அங்கீகாரம்பெற்ற பொறியாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, முதல் நிலை சரிபார்ப்பு தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மாவட்டத் தலைமையிடத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலரால் எழுத்துப்பூர்வமாக அழைக்கப்படுவர். மேலும் அதன் ஒரு நகல் மாநில தலைமையிடத்திற்கு மேற்குறிப்பிடப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முதல் நிலை சரிபார்ப்பு செய்முறையையும் மேற்பார்வையிடுவதோடு, காகித முத்திரை (கட்டுப்பாட்டு கருவிகளில் ஒட்டப்பட்டுள்ள இளஞ்சிவப்பு காகித முத்திரைகள்) மற்றும் முதல் நிலை சரிபார்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களிலும் தங்கள் கையொப்பங்களை இடுவர். ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியின் இயக்கத்தன்மை சரிபார்ப்பு, முந்தைய முதல் நிலை சரிபார்ப்புக்கு கருவியை (PFLCU) பயன்படுத்தி நடத்தப்படுகிறது. வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி ஒவ்வொன்றிலும் சின்னங்கள் உள்ளீடு செய்யும் பிரிவு (SLU) வாயிலாக மாற்று சின்னங்கள் உள்ளீடு செய்யப்படும். வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் உள்ளீடு செய்யப்படும் சின்னங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் காண்பதற்காக ஒரே நேரத்தில் திரையில் /தொலைக்காட்சித் திரையில் காட்சிப்படுத்தப்படும். முதல் நிலை சரிபார்ப்பின் போது, போலியான கருவிகள் எதுவும் இல்லை என்பதைச் சரிபார்ப்பதற்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் திறக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு கருவியிலும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியிலும் உள்ள ஒவ்வொரு வேட்பாளருக்கும் நேராகவுள்ள பொத்தான்கள் ஒவ்வொன்றிற்கும் 6 வாக்குகள் (அதாவது மொத்தம் 96 வாக்குகள்) பதிவு செய்யப்பட்டு, முடிவுகளைக் கவனித்து, மாதிரி வாக்குப்பதிவு தரவுகளை அழித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இத்துடன், அங்கொன்றுமிங்கொன்றுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5% மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் / வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் அதிகளவில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது (அதாவது 1% மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் 1200 வாக்குகள், 2% மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் 1000 வாக்குகள் மற்றும் 2% மின்னணு வாக்குப்பதிவு கருவிகளில் 500 வாக்குகள்). மின்னணு வாக்குப்பதிவு கருவிகளின் முடிவுகள் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியின் சீட்டுகளின் எண்ணிக்கையுடன் கணக்கிடப்படுகிறது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 5% மின்னணு வாக்குப்பதிவு கருவிகளை/ வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை அங்கொன்றுமிங் கொன்றுமாக தேர்வு செய்யவும் மாதிரி வாக்குப்பதிவு நட்த்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். முதல் நிலை சரிபார்ப்பு நிறைவடைந்த கருவிகளில் பச்சை வண்ண ஒட்டுத்தாள் ஒட்டப்படுகின்றன. மேலும் முதல் நிலை சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்ட கருவிகளில் சிவப்பு வண்ண ஒட்டுத்தாள் ஒட்டப்படுகின்றன. கைபேசி செயலியைப் பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மேலாண்மை அமைப்பில் (EMS) முதல் நிலை சரிபார்பு நிறைவடைந்த மற்றும் முதல் நிலை சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்ட கருவிகளின் நிலை நாளதுவரையாக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மேலாண்மை (EMS) அமைப்பிலிருந்து பெறப்பட்ட முதல் நிலை சரிபார்ப்பு நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல் அங்கீகாரம் பெற்ற அனைத்து தேசிய மற்றும் மாநிலத்தின் அரசியல் கட்சிகளுடனும் பகிரப்படுகிறது. முதல் நிலை சரிபார்ப்பின் போது அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநிலத்தின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முத்திரைகள் படிவங்கள் குறித்த பதிவேடுகளில் கையொப்பமிட அனுமதிக்கப்படுகிறார்கள். முதல் நிலை சரிபார்ப்பு நிராகரிக்கப்பட்ட கருவிகள் திருத்தத்திற்காக தயாரிப்பாளர்களிடம் அனுப்பப்படுகின்றன. முதல் நிலை சரிபார்ப்பு நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் இரட்டைப் பூட்டு போடப்பட்டு, கண்காணிப்பு கேமரா வசதியுடன் குறைந்தளவு 1 பிரிவு ஆயுதப் பாதுகாப்பு கொண்ட காப்பு அறைகளில் வைக்கப்படுகின்றன. பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்கான மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள். முதல் நிலை சரிபார்ப்பு முடிந்தவுடன், தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் முன்னிலையில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 10% வரையிலான மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் வெளியே எடுக்கப்படுகின்றன. விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு பகிரப்படுகிறது. விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு கருவிகளும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் தனித்தனியாக அதற்கென ஒதுக்கப்பட்ட தனி காப்பு அறையில் வைக்கப்படுகின்றன. தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளின் செயல்விளக்க மையங்கள் (EDC), மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையிடத்திலும் வருவாய் உட் கோட்ட அலுவலகங்களிலும் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்கள் / வாக்காளர் கல்வியறிவு மன்றங்களை உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி /பிரிவுக்கும் நடமாடும் செயல்முறை விளக்க வாகனம் (MDV) பயன்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் முதல் நிலை சரிபார்ப்பு, சமவாய்ப்புக்குட்படுத்துதல் மற்றும் செயல்பாட்டு நிலைக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றுக்குப் பின்னர், தேவைப்படுமாயின், பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்கள் தேர்தல் பணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் / வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களைச் சமவாய்ப்புக்குட்படுத்துதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் / வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களின் சமவாய்ப்புக்குட்படுத்துதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு முறையை (EMS) பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களை சட்டமன்றத் தொகுதி / பகுதிவாரியாக ஒதுக்கீடு செய்வதற்காக, தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களின் முதல் முறை சமவாய்ப்புக்குட்படுத்துதல் நடத்தப்படுகிறது. முதல் முறை சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களின் பட்டியலும் (சட்டமன்றத் தொகுதி /பகுதி வாரியாக) தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. போட்டியிடும் வேட்பாளரின் பட்டியலை இறுதி செய்த பின்னர், முதல் முறை சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களின் பட்டியலும் (சட்டமன்றத் தொகுதி /பகுதி வாரியாக) போட்டியிடும் வேட்பாளருடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களை செயல் நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னர், அவற்றை வாக்குச்சாவடி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்வதற்காகவும், இருப்புக் காப்பில் வைப்பதற்காகவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் இயந்திரங்களின் இரண்டாவது முறை சமவாய்ப்புக்குட்படுத்துதல் நடத்தப்படுகிறது. இரண்டாவது முறை சமவாய்ப்புக்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களின் பட்டியல் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பகிரப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களை செயல் நிலைக்கு கொண்டு வருதல் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களை செயல் நிலைக்கு கொண்டு வருவது மாவட்ட அதிகாரியால் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் செய்யப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களின் காப்பறை, மேற்சொன்ன கருவிகளைச் செயல் நிலைக்கு கொண்டு வரும் நாளன்று காணொலிப் பதிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள்/அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்படுகிறது. வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரம் ஒவ்வொன்றிலும் சின்னம் பதிவுவேற்றம் கருவி (SLU) வாயிலாக சின்னம் பதிவு செய்யப்படுகிறது. வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களில் பதிவு செய்யப்படும் சின்னங்கள், வேட்பாளர்கள் /அவர்களின் பிரதிநிதிகள் பார்க்கக்கூடிய வகையில் அவை பதிவு செய்யப்படும் நேரத்திலேயே காட்சித்திரையில் / தொலைக்காட்சித் திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களைச் செயல் நிலைக்கு கொண்டு வருவதற்கு அவை ஒவ்வொன்றிலும் "இவர்களில் எவருமில்லை" (நோட்டா) உட்பட ஒவ்வொரு வேட்பாளருக்குரிய பொத்தானை ஒவ்வொரு வாக்கினை செலுத்துவதன் வாயிலாக சரிபார்க்கப்படுகிறது. மேலும், உத்தேசமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களில் உயரளவு மாதிரி வாக்குப்பதிவில் 1000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மின்னணு முடிவுகள் வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் இயந்திர சீட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் /அவர்களுடைய பிரதிநிதிகள் 5% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களைத் தோராயமாக தேர்ந்தெடுக்கவும், மாதிரி வாக்குப்பதிவு செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள். வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்டுள்ள யாதொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்கள் அவற்றைச் செயல்பாட்டு நிலைக்குக் கொண்டு வரும் போது செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், இருப்புக் காப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களை கொண்டு அவை மாற்றியமைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களை மூடி முத்திரையிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் வேட்பாளர்கள் /அவர்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட அனுமதிக்கப்படுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் இயந்திரங்கள் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அவை இரட்டை பூட்டு அமைப்பு முறையின் கீழ் வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் வைக்கப்படுகின்றன. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் இயந்திரங்களை வழங்குதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கும் நாளன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையானது, காணொலிப் பதிவு வாயிலாக வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்கள் வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச்சாவடி பணியாளர்களிடம் வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் யாதொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களை வேளையில் செயல்படவில்லை எனில், இருப்புக் காப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்களைக் கொண்டு வாயிலாக அவை மாற்றியமைக்கப்படும். வாக்குப்பதிவு நாள் வாக்குப்பதிவு நாளில், உண்மையான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் போட்டியிடும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் முன்னிலையில் குறைந்தது 50 வாக்குகள் (இவர்களில் எவருமில்லை (நோட்டா) உட்பட ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்தளவாக 1 வாக்கு) என மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மாதிரி வாக்குப்பதிவின் மின்னணு முடிவுகள் வாக்காளர் தாம் அளித்த வாக்கை சரிபார்க்கும் இயந்திரத்தின் சீட்டு எண்ணிக்கையுடன் கணக்கிடப்படுகிறது. மாதிரி வாக்குப்பதிவு தரவுகள் கட்டுப்பாட்டுக் கருவியிலிருந்து அழிக்கப்பட்டு, வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரத்தின் சீட்டுகள் கருப்பு உறையில் வைக்கப்பட்டு இளஞ்சிவப்பு காகித முத்திரையைக் கொண்டு மூடி முத்திரையிடப்படும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் இத்தகைய மாதிரி வாக்குப்பதிவிற்கான சான்றிதழைத் தயாரிப்பார். உண்மையான வாக்குப்பதிவை தொடங்குவதற்கு முன், கட்டுப்பாட்டுக் கருவி பச்சை காகித முத்திரை, சிறப்பு அட்டை மற்றும் முகவரி அட்டை ஆகியவற்றை கொண்டு மூடி முத்திரையிடப்படுகிறது. வாக்காளர் தாம் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட சீட்டு விழும் (Drop) பெட்டியும் (வாக்குப் பெட்டி) முகவரி அட்டையைக் கொண்டு மூடி முத்திரையிடப்படும்.