தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026: நடத்தை விதிகள் அமலாக்கம் மற்றும் பறிமுதல் அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 15.03.2026 அன்று பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்வதற்காக, அமலாக்கம் மற்றும் கண்காணிப்புக்கான வலுவான கட்டமைப்பை ஆணையம் நிறுவியுள்ளது. 1. தேர்தல் நடத்தை விதிகளைச் செயல்படுத்துதல் அனுமதிக்கப்படாத அரசியல் விளம்பரங்களை அகற்றுவதற்கும், பொது மற்றும் தனியார் சொத்துக்களில் உள்ள விளம்பரங்களை நீக்குவதற்கும் மாநிலம் முழுவதும் விரிவான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட அனுமதியற்ற விளம்பரங்கள் (சுவரொட்டிகள்/பதாகைகள் போன்றவை) அகற்றப்பட்டுவிட்டன என்பதையும், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான சான்றளிக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலாக்கத்தின் மாவட்ட வாரியான நிலை (24.03.2026 வரை) வ. எண் மாவட்டத்தின் பெயர் பொது இடங்களில் சுவர் விளம்பரம் அகற்றியது தனியாரின் இடங்களில் சுவர் விளம்பரம் அகற்றியது மொத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 1. திருவள்ளூர் 38575 21518 3 2. சென்னை 27249 10572 2 3. காஞ்சிபுரம் 8784 4730 0 4. வேலூர் 6048 3003 1 5. கிருஷ்ணகிரி 10260 4692 0 6. தர்மபுரி 17125 13771 0 7. திருவண்ணாமலை 10220 5907 0 8. விழுப்புரம் 5359 3387 1 9. சேலம் 16762 10613 1 10. நாமக்கல் 8025 2114 3 11. ஈரோடு 21335 9519 71 12. நீலகிரி 12038 2235 0 13. கோயம்புத்துதூர் 40816 15263 2 14. திண்டுக்கல் 11978 4476 66 15. கரூர் 8796 3892 0 16. திருச்சிராப்பள்ளி 15154 9225 0 17. பெரம்பலூர் 6029 7640 0 18. கடலூர் 48793 39311 0 19. நாகப்பட்டினம் 1990 958 0 20. திருவாரூர் 9881 7672 0 21. தஞ்சாவூர் 10533 6466 2 22. புதுக்கோட்டை 7205 1598 0 23. சிவகங்கை 3181 1092 0 24. மதுரை 6800 4724 190 25. தேனி 3459 3150 183 26. விருதுநகர் 5779 1373 0 27. ராமநாதபுரம் 6125 3574 1 28. தூத்துக்குடி 4923 1502 7 29. திருநெல்வேலி 18514 16153 0 30. கன்னியாகுமரி 7733 6322 0 31. அரியலூர் 4068 5380 0 32. திருப்பூர் 7603 2226 0 33. கள்ளக்குறிச்சி 7075 2589 5 34. தென்காசி 7960 3480 6 35. செங்கல்பட்டு 9563 5869 0 36. திருப்பத்தூர் 10906 2679 0 37. ராணிப்பேட்டை 5601 5371 0 38. மயிலாடுதுறை 2056 1995 0 மொத்தம் 454321 256041 544 2. கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு தேர்தல் நடத்தை விதிகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கவும், தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கவும் மாநிலம் முழுவதும் பல அடுக்கு அமலாக்க அமைப்பு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2169 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24x7 மணிநேரமும் (முழுநேரமும்) இயங்கி வருகின்றன, மேலும் cVigil செயலி மற்றும் பிற வழிகள் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றன. முக்கிய இடங்கள் மற்றும் சோதனைச் சாவடிகளில் மொத்தம் 2166 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் இதர கவர்ச்சிப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க இக்குழுக்கள் வாகனங்கள் மற்றும் தனிநபர்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. 3. அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல் தேர்தலில் பண பலத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சட்டவிரோதத் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கணிசமான அளவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரொக்கம், மதுபானம், போதைப்பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் வாக்காளர்களைக் கவரக்கூடிய பிற பொருட்கள் அடங்கும். பறிமுதல் அறிக்கை - 24.03.2026 வரை (ரூபாய் கோடிகளில்) வ.எண் வகை 24.03.2026 வரையிலான மொத்தத் தொகை 1 ரொக்கம் 34.64 2 மதுபானம் 0.79 3 போதைப்பொருட்கள் 6.76 4 விலைமதிப்பற்ற உலோகங்கள் 112.37 5 இதர பொருட்கள் / இலவசங்கள் 24.22 மொத்தம் 178.78 தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: த.தே.அ. த.நா. செ.வெ. எண்: 013