தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகக்கூடிய வேட்பாளர் பட்டியல் (Form 7A) பார்வை மாற்றுத்திறனாளி மக்களின் வசதிக்காக, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் (படிவம் 7A), தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் எளிதாக அணுகும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் HTML உரை அட்டவணைகளாக (HTML text tables) வழங்கப்பட்டுள்ளது. இதை திரை வாசிப்பான் (Screen Reader) அல்லது உரையிலிருந்து பேச்சாக மாற்றும் (TTS) மென்பொருள் மூலம் எளிதாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பார்வை மாற்றுத்திறனாளி மக்கள் தங்களது சட்டமன்றத் தொகுதியின் பெயரைத் தட்டச்சு செய்து தேடுவதன் மூலம், வேட்பாளர்களின் விவரங்கள், கட்சி மற்றும் ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கான இணையதள முகவரி: https://erolls.tn.gov.in/acwithcandidate_tnla2026/AC_List.aspx உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்: அதேபோல், அனைத்து பொதுமக்களும் தங்கள் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, சட்டமன்றத் தொகுதி வரைபடம், வாக்காளர் விவரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களின் தொடர்பு எண்கள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.. இணையதள முகவரி: https://erolls.tn.gov.in/acwithcandidate_tnla2026/ "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: த.தே.அ. த.நா. செ.வெ. எண்: 027