தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அதனைத் தொடர்ந்து, தொடர் திருத்தக் காலம் தொடங்கியது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து, அதாவது 23.02.2026 முதல் 26.03.2026 வரை (வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு பத்து நாட்கள் முன்புவரை) படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 ஆகியவற்றில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி, முறையாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 06.04.2026 அன்றுள்ளவாறு புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், உரிய வாக்காளர் பதிவு அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியல்கள் தமிழ்நாடு, தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். மேலும், மாவட்டம் வாரியான வாக்காளர் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 07.04.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன வ.எண் வகை தொகை (கோடிகளில்) 1 ரொக்கம் 92.07 2 மதுபானம் 2.04 3 போதைப்பொருட்கள் 75.76 4 விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி) 214.38 5 இதர பொருட்கள்/இலவசங்கள் 78.49 மொத்தம் 462.74 மாவட்டக் குறைதீர்ப்பு ஆணையம் அல்லது வருமான வரித் துறையிடம் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு எந்தவிதமான அலைக்கழிப்போ அல்லது சிரமமோ ஏற்படாதவாறு, பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ₹278 கோடி மதிப்பிலான பணம்/இதரப் பொருட்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பறிமுதல் செய்யப்பட்ட பணம்/இதரப் பொருட்கள் குறித்து அந்தந்த முகமைகளால் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" அர்ச்சனா பட்நாயக், தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியில் (06.04.2026) மாவட்ட வாரியான வாக்காளர்கள் வரிசை எண் மாவட்டம் ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம் 1 திருவள்ளூர் 1,569,312 1,640,283 618 3,210,213 2 சென்னை 1,395,716 1,496,921 868 2,893,505 3 காஞ்சிபுரம் 585,274 622,279 204 1,207,757 4 வேலூர் 556,783 591,899 165 1,148,847 5 கிருஷ்ணகிரி 783,351 785,524 266 1,569,141 6 தருமபுரி 629,980 621,887 152 1,252,019 7 திருவண்ணாமலை 950,689 983,736 157 1,934,582 8 விழுப்புரம் 788,677 809,870 215 1,598,762 9 சேலம் 1,382,049 1,397,983 324 2,780,356 10 நாமக்கல் 641,118 682,427 208 1,323,753 11 ஈரோடு 847,197 911,778 182 1,759,157 12 நீலகிரி 263,603 288,377 26 552,006 13 கோயம்புத்தூர் 1,322,759 1,421,179 534 2,744,472 14 திண்டுக்கல் 820,907 868,740 175 1,689,822 15 கரூர் 408,941 442,668 81 851,690 16 திருச்சிராப்பள்ளி 1,040,900 1,105,841 310 2,147,051 17 பெரம்பலூர் 273,255 285,474 32 558,761 18 கடலூர் 999,968 1,034,704 299 2,034,971 19 நாகப்பட்டினம் 261,714 270,936 30 532,680 20 திருவாரூர் 484,548 504,135 51 988,734 21 தஞ்சாவூர் 955,150 1,013,417 157 1,968,724 22 புதுக்கோட்டை 645,813 663,613 70 1,309,496 23 சிவகங்கை 548,106 571,186 43 1,119,335 24 மதுரை 1,222,309 1,273,616 265 2,496,190 25 தேனி 506,058 535,303 178 1,041,539 26 விருதுநகர் 734,350 774,921 247 1,509,518 27 ராமநாதபுரம் 559,525 570,152 56 1,129,733 28 தூத்துக்குடி 677,004 710,981 201 1,388,186 29 திருநெல்வேலி 616,911 648,245 146 1,265,302 30 கன்னியாகுமரி 755,254 764,958 126 1,520,338 31 அரியலூர் 260,565 265,799 28 526,392 32 திருப்பூர் 957,453 1,026,178 251 1,983,882 33 கள்ளக்குறிச்சி 557,523 564,073 207 1,121,803 34 தென்காசி 622,003 650,767 170 1,272,940 35 செங்கல்பட்டு 1,125,181 1,179,246 387 2,304,814 36 திருப்பத்தூர் 453,343 466,343 141 919,827 37 ராணிப்பேட்டை 464,430 487,317 111 951,858 38 மயிலாடுதுறை 362,939 372,149 47 735,135 மொத்தம் 28,030,658 29,304,905 7,728 57,343,291 ஆதாரம்: த.தே.அ. த.நா. செ.வெ. எண்: 021