2026 தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள்: ரூ.1000 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 2,283 தேர்தல் பறக்கும் படைகளும், மேற்கு வங்கத்தில் 2,728 தேர்தல் பறக்கும் படைகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ரூ.100.19 கோடி ரொக்கமும், ரூ.3.85 கோடி மதிப்பிலான மதுபானமும், ரூ.76.72 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும் ரூ.259.14 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் ரூ.27.48 கோடி ரொக்கமும் ரூ.102.45 கோடி மதிப்பிலான மதுபானமும், ரூ.178.83 கோடி மதிப்பிலான இலவசப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு மாநிலங்களிலும் ஆபரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் ரூ.1072.13 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப் பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் இலவசப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254524®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்