இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு:மக்கள் தொகை, அளவு ஆகியவற்றில் உலகளாவிய சாதனை நிர்வாகம், பரிவர்த்தனை, சேவைகள் வழங்குதல் ஆகியவற்றில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உருமாற்றம் செய்து வருகிறது. இந்த மாற்றத்தில் இந்தியா பெரும் எண்ணிக்கையில் டிஜிட்டல் நடைமுறைகளில் பயன்பாட்டாளர் என்பதிலிருந்து மக்கள் தொகைக்கு ஏற்ப அளவை உயர்த்தும் சிற்பியாக விளங்குகிறது. உலக நாடுகள் நம்பிக்கையான அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் வழிமுறைகளை ஆராய்ந்து வரும் நிலையில், இந்தியாவின் அனுபவம் நீடித்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. அடையாளம் காணுதல், வங்கி நடைமுறை, இணைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மூலம் அதற்கு காலூன்றப்பட்டது. இது ஜன்தன், ஆதார், செல்பேசி என்ற மும்முனை கருவியாக மாற்றம் பெற்றது. 2026 மார்ச் நிலவரப்படி 144 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதே போல் 2015-ல் 14.72 கோடியாக இருந்த ஜன்தன் கணக்குகள் 2026 மார்ச் நிலவரப்படி 57.71 கோடியாக அதிகரித்துள்ளது. வைப்புத் தொகையின் அளவு இந்தக் காலக்கட்டத்தில் 15,670 கோடி ரூபாயிலிருந்து 2.94 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பயனாளிகளுக்கு 39.18 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. செல்பேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2025 டிசம்பர் இறுதியில் 125.87 கோடியை எட்டியுள்ளது. பணபரிவர்த்தனைக்கான யுபிஐ பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஜனவரி 2026-ல் யுபிஐ மூலம் 28.33 கோடி ரூபாய் மதிப்புக்கு 21.70 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. உலகின் மிகப் பெரிய அதிவிரைவான பணபரிவர்த்தனை நடைமுறையாக சர்வதேச செலாவணி நிதியத்தால் ஜூன் 2025 அறிக்கையில் யுபிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொது நிதிநிர்வாக முறை, டிஜிட்டல் வணிகத்திற்கான திறந்தநிலை வலைப்பின்னல், அரசு இ-சந்தை, டிஜி லாக்கர், புது யுக நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த செல்பேசி பயன்பாடு (உமாங்), இ-நீதிமன்றங்கள், இ-சஞ்சீவனி, ஆரோக்கிய சேது, பிரதமரின் கதி சக்தி போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கின்றன. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு பயன்பாட்டுக்காக பிப்ரவரி 2026 நிலவரப்படி அர்மீனியா, சுரிநாம், பப்புவா நியுகினியா, கென்யா, கியூபா, கொலம்பியா, இலங்கை, பிரேசில், மாலத்தீவுகள், மலேசியா உள்பட 24 நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூடான், இலங்கை, பிரான்ஸ், மொரிஷியஸ், கத்தார் ஆகிய எட்டு நாடுகள் யுபிஐ பணபரிவர்த்தனை முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புடனான இந்தியாவின் பயணம் டிஜிட்டல் யுகத்தில் வளர்ச்சியும் நிர்வாகமும் எவ்வாறு விரிவான மாற்றத்தைப் பெற்றுள்ளன என்பதை பிரதிபலிக்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235812®=3&lang=2 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்